
தடுப்பூசி வழங்கும் நிலையங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று ஆராய்வு
யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகளை பரந்தளவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் யாழ் மாவட்டத்தில் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், யாழ் பரியோவான் கல்லூரி, கைதடி உட்பட பல்வேறு தடுப்பூசி வழங்கும் மையங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோருடன் கள நிலைரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், யாழ். மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகம் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் 11 இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், நாளை தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை மும்மடங்காக மாவட்டத்தின் பல்வேறு பிரதேங்களுக்கும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.