
தடுப்பூசிக்கு கையெழுத்து பெறுவது குறித்து கெஹெலிய பதில்
இலங்கையில் உள்ள சூழ்நிலைக்கமைய நோய் பரவாமல் தடுக்க, ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதற்கான முடிவு விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட நிபுணர் குழுவினால் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று (1) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர், கண்டி பிதேசத்தில் பொதுமக்களுக்கு ஸ்பூட்னிக் தடுப்பூசியி வழங்கும் போது, ஒரு டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது எனக் கூறி பொதுமக்களிடமிருந்து கையொப்பம் பெற்றிருப்பதாகவும், அது யாருடைய அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான, கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார் .