சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  1833 news
  •  ·  0 friends
  • 1 followers

பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும்.- இலக்கை நிர்ணயித்துச் செயற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு

"வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப் புரிந்துகொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும்.என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டத்துக்குத் தலைமையேற்று ஆரம்ப உரையாற்றிய ஆளுநர்,

"விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் தெரிவு செய்யும் மாணவர்கள் சிலர், தமது பிரதேச பாடசாலைகளில் அந்தக் கற்கை நெறியை படிப்பிப்பதற்குரிய ஆசிரியர்கள் இல்லாமல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வேறு நகரங்களுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து படிக்கின்றனர். இவ்வாறு படிக்கும் மாணவர்களில் சிலர், கல்வியை ஒழுங்காகத் தொடராது தவறான வழியில் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, சகல பாடசாலைகளிலும் விஞ்ஞானப் பிரிவை உயர்தரத்தில் மாணவர்கள் தெரிவு செய்தால், அதைக் கற்பிப்பதற்கு ஆசிரியர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாடசாலையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ எந்தவொரு கட்டணமும் அறவிடக் கூடாது. அரசின் சுற்றறிக்கையும் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. கட்டண அறவீடுகள் நடக்காமல் இருப்பதை கல்வி அமைச்சின் செயலர் கவனித்துக்கொள்ள வேண்டும்.

பாடசாலைகளுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், அவற்றில் பல இடங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இது ஊழல், மோசடிக்கு வழிவகுக்கின்றது. இதைக் கண்காணிப்பதற்கு இறுக்கமான பொறிமுறை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் பலர் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றால் அவர்களை அதிகாரிகள் சந்திப்பதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. அவ்வாறு செயற்படக்கூடாது. அவர்களுக்கு சேவையாற்றுவதற்காகத்தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே, ஆசிரியர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படும்போது திறமையான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வடக்கு மாகாணம் 2030 ஆம் ஆண்டு கல்வியில் முதலிடத்துக்கு வரவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துப் பயணிக்க வேண்டும். அதை நோக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் முன்னேறிச் செல்ல வேண்டும்.

கடந்த காலங்களைப் போன்று கல்வித்துறையில் இனி அரசியல் தலையீடுகள் இருக்காது என ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார். எனவே, அதிகாரிகள் துணிந்து பணியாற்ற முடியும். கடந்த காலங்களில் அதிகாரிகள் பழிவாங்கபட்ட சம்பவங்களும் இனி நடக்காது. எனவே, மக்கள் நம்பும் வகையில் அரச அதிகாரிகளின் சேவைகள் இருக்க வேண்டும்." - என்றார்.

இந்நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் குறிப்பிடும்போது,

"வடக்கு மாகாணத்தில் 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமை இருக்கின்றது. தேசிய ரீதியில் கூட 17 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலைமைதான் உள்ளது. இங்கு பாட ரீதியாகவே ஆசிரியப் பற்றாக்குறை இருக்கின்றது.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்திலிருந்தாலும், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 8ஆம் இடத்தில்தான் வடக்கு மாகாணம் உள்ளது. இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு ஆசிரியர்களின் கற்பித்தலை கண்காணிப்பதற்கான பொறிமுறை வலுவாக இல்லை என்பதும் ஒரு காரணம். அதைக் கண்காணிப்பதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய பணியை ஆற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு வடக்கு மாகாணத்தில் பாரிய வெற்றிடம் நிலவுகின்றது. எனவே, அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு சிரேஷ்ட ஆசிரியர்களை, ஆசிரிய வளவாளர்களை நியமிப்பதற்கு ஆளுநரின் அனுமதி வேண்டும்." என வலியுறுத்தினார் இதற்கு ஆளுநர் உடனடியாக அதற்கான அனுமதியை வழங்கினார்.

"வெளிமாவட்டங்களில் 7 ஆண்டுகளில் பணியாற்றிய பின்னர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பும் ஆசிரியர்கள் பலர், தமது வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலையே வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். இந்த மனநிலை வளர்ந்து செல்வதாகவும், எதிர்காலத்தில் இது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்." - என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் 4 ஆயிரத்து 500 தொடக்கம் 6 ஆசிரியர்கள் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கி நின்று கற்பிப்பதற்கு வசதிகள் உள்ளன. ஆனாலும், இவர்கள் இப்படிச் செல்வதால், பாடசாலை முடிந்தவுடன் அங்கிருந்து புறப்படுகின்றனர். மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது. இவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்கு மாகாணத்தின் சில பாடசாலை அதிபர்கள் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்குச் செல்லும் மாணவர்களின் தபால் அடையாள அட்டையில் மோசடி செய்து, வயது கூடியவர்களை குறைந்த வயதுடையர்களின் போட்டிக்கு அனுப்பும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன." - என்றார்.

இதன்போது ஆளுநர், வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒழுக்கம்தான் முக்கியம். அவ்வாறான அதிபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

அதேபோல் வடக்கு மாகாண கலாசாரப் பிரிவால், பிரதேச செயலக ரீதியான கலாசார நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா நிதியை இரண்டரை இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும், மாவட்ட நிகழ்வுகளுக்கு வழங்கப்படும் நிதியை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஆளுநர் அனுமதி வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

000

  • 144
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads