Ads
முதல் நாளே சர்ச்சையை கிளப்பிய அர்ச்சுனா
இலங்கையின் 10வது பாராளுமன்றம் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அர்ச்சுனா அங்கு எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆசனங்களில் அமர முடியாது என்பது மரபு. அர்ச்சுனா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டார்.
Info
Ads
Latest News
Ads