மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு - சீன தூதுவர் கீ சென்ஹொங்
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றமையானது, தமிழ் மக்கள் புதிய எதிர்காலம் ஒன்றை எதிர்பார்ப்பதைக் காட்டுகிறது. = அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.
சீனா இலங்கையின் நீண்ட கால நண்பனாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை மக்களின் ஆணையை சீனா மதிக்கிறது.
அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறிய விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது. இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய அண்டைய நாடுகளாகும்.
அவரது விஜயத்தினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்த முடியும். புதிய அபிவிருத்திகளைக் காண்பதற்கு நாம் ஆர்வத்துடன் உள்ளோம்.
அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் சீனாவுக்கும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம்.
பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சீனா இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாகும் என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்
000