Category:
Created:
Updated:
இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான தேசிய மக்கள் சக்தி 2/3 என்ற பெரும்பான்மையை பெற்றுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசனங்களையும், இலங்கை தமிழரசு கட்சி 7 ஆசனங்களை, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.