டிரம்ப் வெற்றிக்கு பின் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு மிகப்பெரிய உதவியாக எலான் மஸ்க் இருந்தார். அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது டிரம்ப் வெற்றிக்குப் பிறகு, எக்ஸ் தளத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
டிரம்ப் வெற்றிக்கு அடுத்த நாளிலிருந்து, எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் சிலரின் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மொபைல் செயலி மூலம் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வெளியேறிவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. ப்ளூ ஸ்கை என்ற சமூக ஊடகத்தின் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஒரே வாரத்தில் 10 லட்சம் புதிய பயனர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ப்ளூ ஸ்கையின் மொத்த பயனர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறிய தி கார்டன் என்ற செய்தி நிறுவனம், அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் தலையீடு செய்தது கவலை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.