Ads
வரித்தொகை விவகாரம் - மென்டிஸ் நிறுவனத்திற்கு 30 ஆம் திகதிவரை காலக்கேடு - தவறினால் உற்பத்தி உரிமம் நிறுத்தப்படும் - மதுவரி திணைக்களம் அறிவிப்பு
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக நிலுவையில் உள்ள வரித்தொகையினை W.M.மென்டிஸ் நிறுவனம் செலுத்தத் தவறினால், அதன் மதுபான உற்பத்தி உரிமத்தினை இழக்க நேரிடும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான ஆலோசனை குறித்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, W.M.மென்டிஸ் நிறுவனம் திறைசேரிக்கு 5. 5 பில்லியன் ரூபாவினை செலுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிலுவைத் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தத் தவறும் நிலையில், மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
000
Info
Ads
Latest News
Ads