சினிமா செய்திகள்
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷ
பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை க
கமலஹாசனின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்தின் டீசர் வெளியீடு
கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத
அபிஷேக்பச்சனுக்கு பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்
கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள்
பிக்பாஸ் விக்ரமன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்
ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன் - ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு
 ‘பிளடி பெக்கர்’ படம் படுதோல்வி
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோட
 விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்ட
Ads
 ·   ·  1778 news
  •  ·  0 friends
  • 1 followers

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றம் - மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவிப்பு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 12 வாக்களிப்பு நிலையங்கள் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக இயங்கிய 12 நிலையங்களே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி, ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணி மண்டபத்துக்கும், நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்துக்கும், அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்பு நிலையம் அராலி இந்து கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வயாவிளான் மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மானிப்பாய் தேர்தல் தொகுதியில் தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை மண்டப இலக்கம் 1 வாக்களிப்பு நிலையம் தாவடி தெற்கு சனசமூக நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்பாய் தேர்தல் தொகுதியில் அச்சுவேலி மத்திய கல்லூரி மண்டப இலக்கம் 2 வாக்களிப்பு நிலையம் அச்சுவேலி ஆரம்பப் பாடசாலைக்கும், அச்சுவேலி விக்னேஸ்வரா சனசமூக நிலைய வாக்களிப்பு நிலையம் விக்னேஸ்வரா முன்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளன.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் இமையாணன் மாந்தோட்ட சிவஞான வைரவர் ஆலய மண்டப வாக்களிப்பு நிலையம் உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கும், கரணவாய் சக்கலாவத்தை பொது நோக்கு மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் கொற்றாவத்தை செட்டித்தறை சித்தி விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.

நல்லூர் தேர்தல் தொகுதியில் கொக்குவில் மேற்கு கிறிஸ்தவாலய தமிழ்க் கலவன்பாடசாலை மண்டப இலக்கம் 1 இல் இயங்கிய வாக்களிப்பு நிலையம் வீரமாபிடாரி அம்பாள் ஆலய மண்டபத்துக்கும், நாவலர் கலாசார மண்டபத்தில் இயங்கிய வாக்களிப்பு நிலையம் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்

  • 387
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads