Category:
Created:
Updated:
தற்போதைய அரசாங்கம் இதுவரை 1.2 ட்ரில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஏற்று இரண்டு மாதங்களுக்குள் இத்தகைய கடன் தொகை பெறப்பட்டுள்ளது. கடன் பெறப் போவதில்லை என ஆட்சியைக் கைப்பற்ற முன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தது.
தற்போது மாறுபட்ட வகையில் அந்த அரசாங்கம் நடந்து கொள்வதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.