Ads
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என மனோ கணேசன் கூறினார்
தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல. அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும். உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைதான் வலியுறுத்துகிறது.
குறிப்பாக தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும்.
இதுவே, எமது பிரதிநிதித்துவத்தை பெற்று கொள்ள உள்ள ஒரே வழி. இதை தான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads