ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் 18,394 வாகன விபத்துக்கள் பதிவு - 1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தகவல்
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இடம்பெற்ற 18,394 வாகன விபத்துக்களில் 1774 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவற்றுள் 1423 ஆண்கள் மற்றும் 351 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்களால் அதிகளவில் உயிரிழந்துள்ளவர்கள் பாதசாரிகள் எனவும் அவர்களின் எண்ணிக்கை 636 ஆகும்.
இதேவேளை, 536 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 116 சைக்கிள் ஓட்டுநர்கள் , 125 சாரதிகள் , 236 பயணிகள் மற்றும் ஏனைய நான்கு பேர் இந்த விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் தவறால் 580 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், நாளொன்றுக்கு மாலை 4.00 - 8.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் அதிகளவில் வாகன விபத்துக்கள் பதிவாவதாகவும் போக்குவரத்து பொலிஸார் கூறுகின்றனர்