சினிமா செய்திகள்
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷ
பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை க
கமலஹாசனின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்தின் டீசர் வெளியீடு
கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத
அபிஷேக்பச்சனுக்கு பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்
கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள்
பிக்பாஸ் விக்ரமன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்
ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன் - ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு
 ‘பிளடி பெக்கர்’ படம் படுதோல்வி
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோட
 விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்ட
Ads
 ·   ·  1767 news
  •  ·  0 friends
  • 1 followers

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க முடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் ஆவணங்களின் ஊடாக வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட காணொளியொன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டே அவர் இவ்வாறு கூறினார். இந்த காணொளியில் அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

”தபால் மூல வாக்களிப்பும், வாக்கு சீட்டு விநியோகமும் நிறைவடைந்துள்ளன. வாக்கு சீட்டுக்கள் கிடைக்கப் பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

பிரசார நடவடிக்கைகள் நாளை 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. 12, 13ஆம் திகதிகள் அமைதி காலமாகும். இக்காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்களும், ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்களும் வழங்கப்படும்.

வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது தாம் தெரிவு செய்யும் கட்சி சின்னத்துக்கு அல்லது சுயாதீன குழுவுக்கு அருகில் புள்ளடியிட வேண்டும். புள்ளடியிடப்படாத வாக்குசீட்டுக்கள் நிராகரிக்கப்படும்.

அதன் பின்னர் தமது விருப்பத் தெரிவான வேட்பாளரது இலக்கத்துக்கு புள்ளடியிட வேண்டும். ஒரு வாக்களருக்கு மூன்று விருப்பத் தெரிவுகள் உள்ளன. தெரிவுசெய்யும் மூன்று வேட்பாளர்களது எண்களுக்கும் மேலாக புள்ளடியை பதிவிட வேண்டும். இதற்கு அப்பால் தவறான முறையில் வாக்களிப்பவர்களது வாக்குகள் நிராகரிக்கப்படும்.

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். தேசிய அடையாள அட்டை, செல்லுப்படியாகும் கடவுச்சீட்டு, செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம், அரச சேவையில் ஓய்வுபெற்றவர்களுக்கான அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள மத குருமார்களுக்கான அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடான கடிதம், விசேட தேவையுடையோருக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

இந்த அடையாள அட்டைகள் அல்லது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாதவர்கள் தேர்தல் அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத எந்தவொரு ஆவணத்தை செல்லுப்படியாகும் ஆவணமாக பயன்படுத்த முடியாது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து தற்காலிக தேர்தல் அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும்.” என்றார்.

000

  • 766
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads