புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதம் – எதிர்கால பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் மாணவர்களின் பாடசாலைக் கல்வியிலும் பாதிப்பு ஏற்படும் என பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவிக்கையில்,
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க முடியவில்லை.
எவ்வாறிருப்பினும், இது தொடர்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
000