Category:
Created:
Updated:
வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேல் நேற்றிரவு நடத்திய இரண்டு ஏவுகணை தாக்குதல்களில் 84 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் சுமார் 50 சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வடகிழக்கு லெபனானில் சுமார் 10 வான் வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
அத்துடன் லெபனான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
000