சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா
தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான
நாசூக்காக கூறினார் எம் எஸ் பாஸ்கர்
நமக்கெல்லாம் தெரிந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இசைவாணியின் "ஐ அம் சாரி ஐயப்பா" பாடல் அருமை...இந்தப் பாடலை ஆடிக்கொண்ட
தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்; காப்பாற்றியது நயன்தாரா - தம்பி ராமையா
அண்மையில் பேட்டி ஒன்றில் தம்பி ராமையா, தான் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,, நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக கூறியுள்ளார். இது குறி
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
Ads
 ·   ·  1913 news
  •  ·  0 friends
  • 1 followers

அறிக்கை பொய்யென உறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் - பிரதமருக்கு ரணில் சவால்

நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கானது இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ஆடை அணிந்தாலும் அந்த ஆடை இன்னும் அவர்களின் உடலுக்கு பொருத்தம் இல்லாமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

அதேநேரம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அறிக்கை தயாரித்த உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை பொய் என பிரதமர் ஹரிணி உறுதிப்படுத்த தவறினால் சம்பிரதாய பிரகாரம் பிரதமர் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் சவால்களை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த சவால்களை வெற்றிகொள்ள உதவியாக இருந்தவர்களே இன்று காஸ் சிலிண்டரில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பது அரசாங்கத்தினால் அல்ல, ஊடகங்களால் ஆகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். பழைய அடிமைத்துவத்தை கைவிட முடியாத சில ஊடகங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

இந்த கதையை சொல்வது யார்? அழுக்கான ஆடையை கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆகும். ஆரம்பமாக பணம் அச்சிட்டதாக தெரிவித்து, பின்னர் பணம் அச்சிடவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

பணம் அச்சிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும்போது பணம் அச்சிடவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

திரவத்தன்மையை பாதுகாத்துக்கொள்வதற்காக பணம் அச்சிட்டதாக மத்திய வங்கி தெரிவிக்கிறது. வங்கி திரவத்தன்மை தொடர்பில் அவர்களுக்கு தெரியாது என்பதற்கு ஊடகங்களுக்கு எவ்வாறு குற்றம் தெரிவிக்க முடியும்.

பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கூட இந்த திரவத்தன்மை தொடர்பில் பேசியிருந்தார். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் 3 பேருக்கும் அது தெரியாது. இவர்கள் அனுபவமில்லாதவர்கள். அதனால்தான் அனுபவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கிறேன்.

இவர்கள் ஜனநாயக ஆடை அணிந்தாலும் இன்னும் அது அவர்களுக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது.

அதேபோன்று பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதாக அச்சுறுத்துகின்றனர். அவர்களால் எப்படி பாராளுமன்றத்தை துப்புரவுபடுத்த முடியும்? பாராளுமன்றம் ஊழல் நிறைந்தது என நீங்கள் தெரிவித்ததற்கு நாட்டு மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். யாருக்காவது ஊழல் குற்றச்சாட்டு இருக்குமானால் மக்கள் அவர்களை தேர்தலில் நிராகரிப்பார்கள்.

அத்துடன் மின்சார கட்டணம், எரிபொருள் கட்டணத்தை குறைத்ததாக தெரிவிக்கிறார்கள். நாங்கள் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்தின் பிரகாரம், இந்த வருடம் இறுதி வரை மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணம் குறையவேண்டும். ஆனால், அவர்கள் தெரிவித்த பிரகாரம் தற்போது இந்த விலைகள் குறைந்திருக்கிறதா?

அதேபோன்று நாட்டின் அரச நிர்வாகத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருப்பவர் பிரதமராகும். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை ஒன்று இல்லை என அவர் தெரிவிக்கிறார். பல அதிகாரிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அவர்களின் கையெழுத்தை திருட்டுத்தனமாக வைத்ததா என அந்த அதிகாரிகளிடம் பிரதமர் கேட்கவேண்டும்.  பிரதமர் அல்லது அமைச்சர் பொய் சொன்னால் பதவியை இராஜினாமா செய்யும் சம்பிரதாயம் இருக்கிறது.

அவ்வாறு என்றால் பிரதமர், உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டு, அவர் தெரிவித்தது பொய் என்றால் பதவி விலகவேண்டும்.

இவர்கள் என்னதான் சத்தம் போட்டாலும் அரசியல் அமைப்பு தொடர்பில் இவர்களுக்கு தெரியாது. அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கும்போது அது போதாது 20ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவித்தது திசைகாட்டியாகும்.

அதன் பிரகாரம் உதய செனவிரத்ன குழுவை நியமித்து இரண்டு சந்தர்ப்பங்களில் 20ஆயிரம் அடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதற்காக நாங்கள் நிதி ஒதிக்கி இருக்கிறோம். ஆனால் அந்த பணத்தை வழங்குவதற்கு அவர்கள் இன்னும் இணங்கவில்லை.

அரச ஊழிர்களுக்கு இந்த அதிகரிக்கப்பட்ட பணத்தை வழங்க முடியுமா முடியாதா என அரசாங்கம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

அதனால் அரசாங்கம் இந்த அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கும் வரை இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்

00

  • 716
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads