சினிமா செய்திகள்
இயக்குநர் நாகேந்திரன் காலமானார்
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
Ads
 ·   ·  2883 news
  •  ·  1 friends
  • 2 followers

2024 நாடாளுமன்ற தேர்தல் - வேட்பு மனு கையேற்பு இன்றுடன் நிறைவு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்றுடன் (11) நிறைவடையவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நேற்றையதினம் வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.  இதுதவிர, பல கட்சிகள் நேற்றையதினம் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுவை நேற்றைய தினம் கையளித்திருந்தது.

அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தேசிய மக்கள் சக்தி குருணாகல் மாவட்டத்திற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்பு மனு நேற்றைய தினம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த வேட்பு மனு கையளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, கம்பஹா, மாத்தறை, மாத்தளை, ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திடும் செயற்பாடு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்தநிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று காலை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

அதேநேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நேற்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் கம்பஹா, களுத்துறை, பதுளை, புத்தளம், அநுராதபுரம், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கட்சியின் சார்பில் நேற்றைய தினம் மாத்தறை மாவட்டத்திற்கான வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஈ.பிடி.பி ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய வேட்புமனுக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பிரதீபனிடம் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

000

  • 1390
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads