சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  1833 news
  •  ·  0 friends
  • 1 followers

ஜனாதிபதி அனுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய டக்ளஸ்

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.  

குறித்த கடிதத்தில் - எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள்

கடந்த காலத்தில் எம்மால் இனங்கண்டு, சிபாரிசுசெய்து, அனுமதிபெறப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடரப்பட வேண்டிய மற்றும் ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த குறுகிய காலமற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் பல உண்டு என்பதை தங்களது அவதானத்துக்குக் கொண்டுவருகிறேன்.

அவ் வேலைத் திட்டங்கள் பின்வருமாறு:-

01.    வன ஜீவராசிகள், வன வளங்கள் மற்றும் தொல்பொருள் ஆகிய திணைக்களங்களால் எல்லையிடப்பட்டுள்ள எமது மக்களது அனைத்துக் காணிகளையும் விடுவித்தல்.

02.    முப் படையினர்,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள எமது மக்களின் காணிகளை முழுமையாக விடுவித்தல்.

03.    இந்தியமுதலீட்டுடன் சூரியமின்சக்திஉற்பத்தியின் கேந்திர நிலையமாக வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புதல்.

04.    வடக்கில், சன் பவர் சூரியமின்சக்தி தனியார் நிறுவனத்தின் உதவியினாலான 50,000 வீடுகளை நிர்மாணித்து எமது மக்களுக்கு இலவசமாக வழங்கல்.

05.    நெடுந்தீவு, நயினாதீவு, அனலைத்தீவில் மாற்று வலு மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்தல். அதன் மூலம் குறைந்த கட்டணத்தில் அமத் தீவுகளிலுள்ள பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குதல்.

06.    நெடுந்தீவு மேற்கில் மேலுமொரு நீர் சுத்திகரிப்புத் தொகுதியைஅமைத்தல்.

07.    ஊர்காவற்றுறை இறங்குதுறை, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை, குறிகாட்டுவான் மற்றும் நெடுந்தீவு இறங்குதுறைகளை புனரமைத்தல் மற்றும் நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்தினை சீர் செய்து,உறுதிபடுத்தல்.

08.    ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடல் மார்க்கபாதை போக்குவரத்தினை உடனடியாக சீர் செய்தல். அதன் அடுத்தகட்டமாக, ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல்.

09.    அராலியையும் வேலணையையும் இணைக்கின்ற தரை மூலமான பாலத்துடன் கூடியபாதையை அமைத்தல் மற்றும் புங்குடுதீவு பாலத்தை புனரமைத்தல்.

10.    இந்திய முதலீட்டுடன் காங்கேசன்துறையில் சிமெந்து அரைத்து, பொதியிடும் ஆலையைவிரைந்து ஆரம்பித்தல்.

11.    பொன்னாவெளியில் சிமெந்து ஆலை ஒன்றினை நிறுவுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

12.    வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை விரிவுபடுத்தி, மேம்படுத்தல்.

13.    பாலி ஆற்றுத் திட்டத்தையும், பூநகரிக் குளத் திட்டத்தையும் விரைவுபடுத்தல்.

14.    சீன அரசு நன்கொடையாக வழங்கியுள்ள அரிசி, கடற்றொழில் வலைகள் மற்றும் வீடுகளை கடற்றொழிலாளர்களுக்கு விரைவாக வழங்கல்.

15.    உள்ளூர் ரின் மீன் உற்பத்தியினைப் பாதிக்கின்றரின் மீன் இறக்குமதிகளை கட்டுப்படுத்தல். அல்லது, அதற்கான இறக்குமதி வரியினை அதிகரித்தல்.

16.    உள்ளூர் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தல்.

17.    இலங்கைக் கடற் பரப்புக்குள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் செயற்பாடுகளை முழுமையாக நிறுத்தல்.

18.    யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, குருநகர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை ஆகியபகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களைஅமைத்தல்.

19.    வடக்கு மாகாணத்தில், கடல் வான் தோண்டும் நடவடிக்கைகளை எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்பாக விரைவுபடுத்தல்.

20.    முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை களப்புப் பகுதிகளை ஆழப்படுத்தி, அபிவிருத்தி செய்து, கடலுணவு வகைகளின் உற்பத்திகளையும், ஏற்றுமதி வருமானத்தையும், அவ்வப் பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில் வாய்ப்புக்களையும் அதிகரித்தல். அதன் ஊடாக மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல்.

21.    முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடலை கடக்கின்ற பிரதான போக்குவரத்து பாலமான வட்டுவாக்கல் பாலத்தை நீரோட்டத்துக்கு இடையூறுகள் அற்றவகையில் சீரமைத்தல்.

22.    கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை விரைவாக வழங்குதல்.

23.    கடற்றொழிலாளர்களுக்கென இலகுகடன் திட்டமொன்றைசெயற்படுத்தல்.

24.    புதிய கடற்றொழில் சட்டத்தையும், நன்னீர் வேளாண்மையின் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தியை முன்னிட்டு, தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை அபிவிருத்தி நிறுவகத்தின் (NAQDA) நவீனமயமாக்கல் தொடர்பிலான புதிய சட்டத்தையும் விரைந்து நடைமுறைப்படுத்தல்.

25.    வடக்கில், கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த இலகுக் கடன் திட்டத்தை செயற்படுத்தல்.

26.    வடக்கில், பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்தல் மற்றும் அவற்றின் உற்பத்தி வரிகளை நியாயமான வகையில் குறைத்தல்.

27.    வடக்கு மாகாணத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மூலம் முதற்கட்ட நிதியுதவி வழங்கப்பட்டு, அத்திவாரங்கள் இடப்பட்டும், ஓரளவு கட்டப்பட்டும் மேலதிக நிதியுதவிகள் வழங்கப்படாத நிலையில் இடைநடுவில் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள வீடுகளை முழுமைப்படுத்துவதற் குநடவடிக்கை எடுத்தல்

28.    அரசாங்கத்தின் மூலமான வீடமைப்பு உதவித் திட்டங்களின் நிதித் தொகையினை அதிகரித்தல்.

29.    காணாமற்போனோர் தொடர்பில் உரியபரிகாரம் காணப்படல்.

30.    பலாலி விமான நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீடுகளை வழங்கல்

31.    சமுர்த்தி மற்றும் ஆறுதல் திட்டங்களை ஒன்றிணைத்தல்

32.    கொழும்பு – காங்கேசன்துறைக்கான ரயில் சேவையை விரைவுபடுத்தல்.

33.    அரசியலாப்பின் 13 வது திருத்தச் சட்டத்தைகட்டம் கட்டமாக (மூன்றுகட்டங்களாக) நடைமுறைப்படுத்துவதன் மூலம், அரசியல் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுதல்.

 

  • 1201
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads