பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ள சிறு முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை
பொது மக்களால் அளிக்கப்பட்டுள்ள சிறு முறைப்பாடுகள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்துக் காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் சில வாரங்களுக்குள் குறித்த முறைப்பாடுகளைத் தொடர்பான விசாரணைகளை நினைவுறுத்துமாறு அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், நாளாந்தம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளை ஓரிரு நாட்களில் விசாரித்து முடிக்குமாறும், அதற்குத் தேவையான அதிகாரிகளைப் பணியில் அமர்த்துமாறும் பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
000