Category:
Created:
Updated:
இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 1, 2024 முதல் மார்ச் 31, 2026 வரையிலான காலத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சனத் ஜெயசூரிய 'இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக' செயற்பட்ட இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களின் போது இலங்கை அணியின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.