Category:
Created:
Updated:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும் நெருங்கிய தொடர்புபட்டவராக அடையாளம் கணப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் கடந்த வாரம் ஹொரனையில் மிகப்பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் அவர் நெருக்கமாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.