அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன் - கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிமுடன் தொலைபேசியில் உரையாடல்
இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் என்டனி பிளிங்கன், கட்டார் பிரதமர் ஷேக் மொஹமட் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிமுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் லெபனான் மற்றும் இஸ்ரேலில் உள்ள தங்களது வீடுகளுக்கு மீண்டும் திரும்புவதற்கு அனுமதிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானத்தை செயற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
1701 என்ற இந்த தீர்மானமானது ஹெஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விரோதப் போக்கை முழுமையாக நிறுத்துவதற்கான யோசனைகள் அடங்கலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதாக ஹெஸ்புல்லாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன.
00