வரி நிலுவைத் தொகை விவகாரம் - மதுபான உற்பத்தியாளர்களுக்கு கால அவகாசம்
மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான மது வரியைச் செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தியாளர்கள் நேற்று மதுவரி திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும்இன்று மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
மது அருந்துவதால் இலங்கையில் நாளொன்றுக்கு 50 பேர் வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
000