இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் - சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்றம் எண்ணெய் விநியோகத்தை சீர்குலைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதன்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு ஒரு வீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து 74.40 டொலராக இருந்தது
எனினும், செவ்வாய்க்கிழமையான நேற்று ஐந்து வீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் கூற்றுப்படி, உலகின் ஏழாவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் காணப்படுகின்றது.
அத்துடன், ஓபெக் அமைப்பின் மூன்றாவது பெரிய உறுப்பு நாடாகவும் உள்ளது.
இந்நிலையில், பிராந்தியத்தில் ஏதேனும் இராணுவ மோதல் தீவிரமடைந்தால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை பாதிக்கலாம் என்றும் வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.
ஓமன் மற்றும் ஈரானுக்கு இடையே அமைந்துள்ள இந்த கப்பல் பாதை ஊடாக உலக எண்ணெய் வர்த்தகத்தில் உலகின் 20 வீத விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏனைய ஓபெக் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளும் தாங்களின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதியை இந்த ஜலசந்தி வழியாக மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது
000