Category:
Created:
Updated:
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இதுவரையில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பான எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை என குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.
இதன்படி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிவரையில் இடம்பெறவுள்ளன.
000