Ads
இலங்கையில் நாளை நடைபெறும் அதிபர் தேர்தல்
செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
கடைசி நாளில், அனைத்து அதிபர் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா போட்டியிடுகிறார்.
இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
இந்த மூவருக்கும் இடையில் கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நால்வரில் யார் அடுத்த இலங்கை அதிபர் என்பதை அறிய காத்திருப்போம்.
Info
Ads
Latest News
Ads