சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1399 news
  •  ·  0 friends
  • 1 followers

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி- யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பிரதீபன்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களுமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

யாழில் 511 வாக்கெடுப்பு நிலையங்களும் கிளிநொச்சியில் 108 வாக்கெடுப்பு நிலையங்களும் என 619 வாக்கெடுப்பு நிலையங்கள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாக்களிப்பு நிலையத்தில் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை 07 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்படும். பிற்பகல் 04 மணிக்கு வாக்களிப்பு நிலைய வரிசையில் தரித்து நிற்கின்ற வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பிற்பகல் 04 மணிக்கு பின்னர் வாக்களிப்பு நிலையத்தினுள் உட்பிரவேசிக்க இடமளிக்க முடியாது.

தெல்லிப்பழையினைச் சொந்த இடமாகக் கொண்டு பருத்தித்துறையில் தற்காலிகமாக வசித்து வருகின்றவர்களை வியாபாரிமூலையிலிருந்து தெல்லிப்பழையில் வாக்களிப்பதற்கு போக்குவரத்து பேருந்துக்கள் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைக்காக 8232 உத்தியோகத்தர்கள் மற்றும் 2100 பொலிஸாரும் கடமையில் ஈடுபடவுள்ளனர்.                  

இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் 42 பேருந்துகளும், தனியார் போக்குவரத்துச் சங்கம் மூலம் 132 பேருந்துகளும் தேர்தல் கடமைகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவில் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்படும்.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு இதர ஆவணங்கள் விநியோகித்தல் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று (20) காலை 07 மணிக்கு ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலாவது பேருந்து காலை 08.30 மணியளவில் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேற்றினை தயாரித்து வெளியிடும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களினதும் வாக்குகளை எண்ணுவதற்காக, 41 வாக்கெண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 வாக்கெண்ணும் நிலையங்களுமாக மத்திய கல்லூரியில் 55 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 280
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads