நெடுந்தாரகை பயணிகள் படகு அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிப்பு
நெடுந்தாரகை பயணிகள் படகு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் உத்தியோகபூர்வமாக இன்று(19) கையளிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகை பயணிகள் படகு இன்றையதினம் (19) தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
முன்பதாக படகில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகள் நிறைவுற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் நெடுந்தாரகை பயணிகள் படகு நேற்று காலை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதேநேரம் இதுவரை காலம் மாகாண சபையின் பொறுப்பில் காணப்பட்ட இந்த படகானது, 52 மில்லியன் ரூபா செலவில் திருத்தப்பட்டு, தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கு குறித்த கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தார்
இதையடுத்து சீர்செய்யப்பட்ட குறித்த படகானது நேற்றையதினம் தனது சேவையை ஆரம்பித்தது.
இதேநேரம் பயணிகள் சேவையை ஆரம்பித்துள்ள நெடுந்தாரகை படகு தினமும் நெடுந்தீவில் இருந்து ஒரு தடவை குறிகட்டுவான் இறங்கு துறைக்கு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.