Ads
200 யானைகளை கொல்ல திட்டமிட்டுள்ள நாடு
தென்னாப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உட்பட சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.
2023இல் மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads