சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் - இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் - திருமயைில் அமைச்சர் டக்ளஸ்

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அனுபவத்தினூடாகத்தான் இம்முறை ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியும் நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என கோருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்களுடனான பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் -

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்  குறிப்பாக அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக வாக்களிப்பார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

இதேநேரம் ஈ.பி.டி.பியினராகிய எமது வழிமுறையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு சாத்தியமான தீர்வை தரும். எம்முடன் இணைந்து பயணியுங்கள் என நான் மூன்று தசாப்தங்களாக திருமலை மாவட்ட மக்களிடம் அழைப்பு விடுத்து வந்திருந்த போதும் அவர்கள் தவறானவர்களின் வழிநடத்தலிலிருந்து மீளமுடியாதிருந்தமையால் பல்வேறு அசௌகரியங்களை இன்றுவரை எதிர்கொண்டுவர நேர்ந்துள்ளது.

இதேநேரம் குறித்த தவறான வழிநடத்தலை மக்கள் ஓரங்கட்டி அதிலிருந்து வெளிவராவிட்டால் இம்மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இன்வரும் காலத்தில் இல்லாதுபோகும் சூழ்நிலை உருவாகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இன்றுவரை இருந்துவருவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியே முக்கிய காரணமாக இருந்திருக்கின்றது

அதற்கு திருமலை மாவட்டத்தில் நாம் அன்று எமக்கிருந்த அரசியல் பிரதிநிதித்துவத்தினூடான செய்த குடியேற்றத் திட்டங்களும் சேவைகளுமே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. அதேபோன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணசபை உள்ளூராட்சி மன்ற தேர்தல்களும் விரைவில் வருவதற்கான காலச் சூழலும் வந்துகொண்டிருக்கின்றது.

நாட்டுக்கு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி எவ்வாறு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேனோ அதேபோன்றுதான் இம்மாவட்டத்திற்கு ஈ.பி.டி.பியின் அரசியல் பிரதிநிதித்துவ பலமும் அவசியமானதொன்றாக இருக்கின்றது.

அதனடிப்படையில் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியை வலுப்படுத்துவது போன்று எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஈ.பிடி.பியின் பலத்தையும் நீங்கள் வலுப்படுத்த வேண்டும். அதனூடாகவே இம்மாவட்டத்தில் வாழும் எமது மக்களின் அபிலாசைகள் அதன் இலக்கை எட்டும் என நினைக்கின்றேன்.

இதேவேளை தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் நன்கு அறிவார்கள்

எம்மை நம்பி உங்கள் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம். நாம் சொல்வதைத்தான் செய்வோம். ஜனாதிபதி ரணிலின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும். என்று அவர் வலியுறுத்தியதுடன் அவரது வெற்றியே காலத்தின் தேவை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

 

  • 1582
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads