வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் - அஞ்சல் திணைக்களம்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள், இன்று முதல் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைச் சமர்ப்பித்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டையைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அஞ்சல் நிலையங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தகுதி பெற்ற அனைவருக்கும், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இல்லாத வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையத்தில் செல்லுபடியாகும் அடையாள அட்டையைக் காண்பித்தும் வாக்களிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000