நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில்
நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் - செப்டெம்பர் 21 ஆம் திகதி மிகவும் முக்கியமான நாளாகும். நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அன்றையதினம் மக்கள் தீர்மானிப்பார்கள். கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம்.
பொருளாதாரமும் வாழ்க்கை செலவும் அறியாத அனுரகுமார திஸாநாயக்க, 2022ஆம் ஆண்டு எந்த உதவியையும் வழங்கவில்லை. நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாது.
இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு எம்மிடம் அந்திய செலாவணி பற்றாக்குறையாகவுள்ளது. எனவே நாம் ஏற்றுமதி பொருளாதாரத்துக்குச் செல்ல வேண்டும்.
அவ்வாறான ஏற்றுமதி பொருளாதாரத்தை அடைவதற்கு நவீனமயமாக்கப்பட்ட விவசாய முறைக்குச் செல்ல வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000