நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது - ஜனாதிபதி ரணில்
சிறுபோகம் மற்றும் பெரும்போகத்தில் நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளது.
போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை மேற்கொண்டு வருமானத்தை ஈட்ட வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆரம்பித்த வேலைத் திட்டத்தின் காரணமாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
குறித்த நாடுகளுடனான பயணத்தை நாம் தொடர வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000