சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
Ads
 ·   ·  1559 news
  •  ·  0 friends
  • 1 followers

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் - ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

எதிர்வரும் 10 வருடத்துக்கு பின்னர் பலர் பணக்காரராக இருப்பீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று பிற்பகல 3 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கினார்.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

உணவு, டீசல், மருந்து இல்லாமல் நாடு முழுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. விவசாயத்துக்கு உரமும் இல்லை.

அச்சந்தர்ப்பத்தில் நாட்டை நான் பொறுப்பெடுத்தேன். உணவு, மருந்து இல்லாமல் நீங்கள் துன்பப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதிலிருந்து மீட்க முன்வந்தேன். நாட்டை மீட்டேன்

அனுர, சஜித் யாரும் நாட்டை மீட்க முன்வரவில்லை. உங்களை பட்டினியில் இருக்கவிட்டார்கள். உணவு, உரம், எரிபொருள், வர்த்தகத்தை முன்னெடுக்க நான் முன் வந்தேன்.

பாடசாலைகளை திறந்து உங்கள் பிள்ளைகளின் கல்வியை தொடர நடவடிக்கை எடுத்தேன்.

நீங்கள் துன்பப்படும் போது யாரும் முன்வரவில்லை. எனது முயற்சிகளுக்கு ஒத்துழைக்க முன்வருமாறும், அரசாங்கத்துடன் இணையுமாறும் நான் கேட்டேன். அவர்கள் முன்வரவில்லை.

அவர்கள் தேர்தல்தான் வேண்டும் என்று கேட்டார்கள். தேர்தல் நடத்துவதற்கு பணம் செலவாகும். அரசுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்தேன். அவர்கள் வரவில்லை.

ஆனால், வேலை நிறுத்தம், தொழிற்சங்க நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்தனர். அதனால் எதுவும் நடக்கவில்லை.

உரம், காஸ், உணவு என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் வகையில் செய்தேன். மண்ணெண்ணை கிடைக்கச் செய்தேன். கடலுக்குச் சென்று மீன்பிடிக்க உங்களுக்கு உதவினேன்.

எமது பணம் வீழ்ச்சியடைந்திருந்தது. டொலரின் பெறுமதி அதிகமாக இருந்த நிலையில் அதனை குறைத்தேன். அதனால், பொருட்களின் விலை படிப்படியாக குறைந்தது.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய தொடங்கியது. வாழ்க்கை செலவு அதிகமாக உள்ளது. அதனை இலகுபடுத்த பல திட்டங்களை வைத்துள்ளேன். அதனை முன்னெடுத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதே அடுத்த 5 ஆண்டு திட்டம்.

ஆனாலும், இப்போது சுமுகமாக வாழ முடிகிறது. இந்த நாட்டிற்கு IMF மற்றும் 18 நாடுகள் உதவின. மேலும் கடன்கள் வழங்கி இன்னும் உதவிகளை செய்ய அந்த நாடுகள் முன்வந்துள்ளன.

5 வருடத்தில் இந்த வேலையை நான் முன்னெடுப்பேன். இயலும் சிறிலங்கா எனும் திட்டத்தால் நாட்டை முன்னேற்றுவேன்.

வாழ்க்கை சுமை இலகுபடுத்தல், தொழில் வாய்ப்பு, வரிச்சுமையை இலகுபடுத்துவது உள்ளிட்ட திட்டங்களே அடுத்த 5 வருடங்களில் முன்னெடுக்கப்படும்.

வீழ்ந்திருந்த நாட்டின் வருமானத்தை எட்டுவதற்கு வரி அதிகரிக்கப்பட வேண்டி ஏற்பட்டது. ரூபாவின் பெறுமதி அதிகரித்தது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் எமது பணம் இழக்கின்றது. நாம் எமது உற்பத்தி பொருட்களை ஏற்றமதி செய்ய வேண்டும்.

நவீன விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனால் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

இப்போது உலகத்தில் சனத்தொகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு நாமும் உணவு கொடுக்கலாம். உணவு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்கலாம்.

அதனால் கிராமத்தில் வறுமை குறையும். நாட்டின் பொருளாதாரமும் முன்னேறும். அவற்றையே நான் முன்னெடுக்கவுள்ளேன்.

சூரியசக்தி உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறோம். 365 நாளும் சூரிய சக்தி எமக்கு கிடைக்கிறது. சூரிய மின்சக்தியை நாங்கள் இந்தியாவிற்கு விற்க முடியும்.

10 ,15 வருடத்தில் இங்குள்ள பலர் பணக்காரர் ஆகிவிடுவார்கள். பூநகரியில் அவ்வாறான மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

000

  • 1293
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads