சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
Ads
 ·   ·  1559 news
  •  ·  0 friends
  • 1 followers

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் - நாட்டைக் கட்டியெழுப்புவதே நோக்கம் - ஜனாதிபதி ரணில்

வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை தியத உயன வெளிப்புற அரங்க மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்ற Open Mic Night இளைஞர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்பாராதவிதமாக அந்த இடத்துக்குச் சென்ற ஜனாதிபதியை இளைஞர்கள் அன்புடன் வரவேற்றனர்.

இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் கேள்விகளுக்குச் சாதகமான பதில்களை வழங்கினார்.

நீங்கள் அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் ஜனாதிபதி கேட்டதற்கு அந்த இளைஞர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றார்.

நாட்டின் இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்ல அரசு அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்கு நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்

மீண்டும் வரிசையில் நிற்க முடியாது என்று இளைஞர் ஒருவர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தனது ஆட்சியில் இந்த நாட்டின் இளைஞர்கள் சினிமா வரிசையில் மாத்திரமே நிற்க வேண்டி ஏற்படும் என்றார்.

இளைஞர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தனது கடந்த கால அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சராக தாம் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்த போது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தன்னை அழைத்து வெள்ளை அறிக்கை நல்லதுதான், ஆனால் மறுசீரமைப்புகளை முன்னெடுக்கச் சென்று அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.

மேலும், அந்த மறுசீரமைப்புகளைச் செய்து தொழிலை இழக்க வேண்டாம் என்று ஜே.ஆர். ஜயவர்தன தமக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய தான் இதுவரை செயற்பட்டதாகவும், ஆனால் இம்முறை நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவற்றுக்கு முரணாக நடக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாம் நாட்டைப் பொறுப்பேற்ற போது பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடன் சுமையுடன் தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

அதன் பிரகாரம், உள்நாட்டு வங்கிகள் ஊடாக கடன் பெற வேண்டாம் என்றும் பணத்தை அச்சிட வேண்டாம் எனச் சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியதாகவும், அந்த நிலையைக் கருத்தில்கொண்டு அரச வருமானத்தை ஈட்டுவதற்கு வட் வரியை அதிகரிக்க வேண்டியேற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாவிட்டால் நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வர முடியாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த இடத்துக்கு எதிர்பாராத விதமாக வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இளைஞர்கள், தமது தேவைகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாட முடிந்தமை தொடர்பில் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர் என்று ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பிரசார ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

000

  • 1737
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads