சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தில் நடிக்க ராணா வாங்கிய சம்பளம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படத்தை லைகா தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் ரஜ
‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
பைக் ரைடில் சாதனைக்கு மேல் சாதனை செய்யும் தல அஜித்
அஜித்குமாருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில், சமீபமாக பொறுமையாகவே படங்கள் நடித்து வருகிறார். அதேசமயம் அடிக்கடி உலகளாவிய பைக் பயணங்களையும் மேற
கைகோர்க்கும் ஜீவா - அர்ஜூன்
தமிழ் சினிமாவில் ஜீவா மற்றும் அர்ஜூன் இணைந்து அகத்தியா என்றதொரு புதிய படத்தில் நடிக்கின்றனர்.தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜ
'ஒன்ஸ்மோர்' படம் பற்றிய தகவல்
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒன்ஸ்மோர்' என பெயரிடப
இந்தியாவின் சுதந்திரத்தை முதல்முறை "ஆல் இந்தியா ரேடியோவில்" அறிவித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?
போராட்டக்காரர்கள் ஏராளம், வீழ்ந்தவர்கள் ஏராளம், தொடர்ந்து போரிட்டவர்கள் ஏராளம், எல்லாம் எதற்காக 'சுதந்திர இந்தியா' என்ற வார்த்தைகளுக்காக. அந்த வார்த்த
தொடங்கியது வேட்டையன் பட புக்கிங்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்
பா.ரஞ்சித், மாரி செல்வராஜின் கதைகள் சாதிய மோதலை ஏற்படுத்துகின்றன"- பாடலாசிரியர் குருமூர்த்தி குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் கலன் திரைப்பட போஸ்டரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். இந்த படத்தை வீர முருகன் இயக்குயுள்ளார், ராம லட்சுமி நிறுவனம் மற்றும் குருமூர்த
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
Ads
 ·   ·  1559 news
  •  ·  0 friends
  • 1 followers

கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா - குற்றம் சுமத்தும் அரசாங்கம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய வெற்று கடவுச்சீட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குடிவரவு திணைக்கள அலுவலகங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது.

இந்தநிலையில், தேசிய மக்கள் சக்தி, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, கடவுச்சீட்டுக்களை வழங்குவது தொடர்பான நெருக்கடிக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்டியிருந்தது.

எவ்வாறாயினும், பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தேசிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் அலஸ், கடவுச்சீட்டு தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகள் இருக்கவில்லை என விளக்கமளித்தார்.

நள்ளிரவில் முன்பதிவு செய்யக்கூடிய இணையப்பதிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் 100 க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி விரைவாக பதிவுகளைப்; பெற்றுக்கொண்டு, அவற்றை அப்பாவி மக்களுக்கு 45,000 ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

தாம், அதைப் பற்றி அறிந்ததும், உடனடியாக இணையப்பதிவு முறையை நிறுத்தவும், வரிசையை அனுமதிக்குமாறு கோரியதாக அலஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் அதன் பின்னரும் வரிசைகளுக்கு முடிவே இல்லை. குறிப்பிட்ட நபர்கள் வரிசையில் காத்திருந்து, அந்த தமது முன்பதிவுகளை 20,000 அல்லது 25ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று போலந்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு புதிய கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காகச் சென்றதாகக் கூறப்படும் செய்திகளையும் அமைச்சர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 1685
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads