இனவாதத்தை தூண்டும் வகையில் உரை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கூறிய கருத்தை ஏற்க முடியாது - அமைச்சர் டக்ளஸ்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடபகுதிக்கு வந்து இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுமந்திரன் வழமைபோன்று அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
வடபகுதியில் அண்மையில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, வடக்கு, கிழக்கு தமிழர்களை மிரட்டும் தொனியில் உரையாற்றியிருந்தமை தொடர்பில் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில் - ஈபிடிபி கட்சி கடந்த காலங்களில் இனவாதத்துக்கு பதிலாக தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சி என்பதனால், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது இனவாதத்தை தூண்டும் வகையில் உரை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000