60 தசாப்தங்களில் இல்லாத வெப்பம் – பரிதவிக்கும் சீனா
1961ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா தனது வெப்பமான ஆகஸ்ட் மாதத்தை இவ்வாண்டு பதிவு செய்ததாக அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
இவ்வாண்டு சீனாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையான வானிலை, வெப்ப அலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டன.
கரியமில வாயுவை வெளியேற்றுவதில் சீனா முன்னணியில் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால், உலகளாவிய பருவநிலை மாற்றம், தீவிர வானிலை நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
கரிம வாயு வெளியேற்றத்தை 2030ஆம் ஆண்டுக்குள் உச்சத்திற்குக் கொண்டுவந்து, பின்னர் 2060ஆம் ஆண்டுக்குள் அதை நிகரப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவரவும் சீனா உறுதிபூண்டுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் சீனா நீடித்த, அதிக வெப்பநிலையை அனுபவித்தது என அந்நாட்டு வானிலைத் துறை நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தது.
ஆகஸ்ட் மாதத்தில் தேசியச் சராசரி வெப்பநிலை 22.6 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது சராசரியாக ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகும் வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகம் எனச் சீனாவின் தேசியப் பருவநிலை மையத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஜியா சியாலாங் கூறினார்.
000