ஒரு நாளைக்கு 28 ஆயிரம் சம்பளம் - டெஸ்லா அறிவித்த வேலை
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலமாக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். தனது நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளுக்காக புதிய புதிய வேலைகளுக்கு எலான் மஸ்க் ஆள் எடுத்து வருகிறார்.
தற்போது ஒரு புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினசரி 7 மணி நேரம் மட்டுமே பார்க்கும் இந்த வேலைக்கு இந்திய மதிப்பில் தினமும் ரூ.28 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் மனிதர்களை போன்ற ஹ்யூமனாய்ட் ரோபோக்களை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வாறாக செய்யப்படும் ரோபோக்களுக்கு மனிதர்களின் நடை, உடை, பாவனை உள்ளிட்டவற்றை கற்றுத்தருவதுதான் அந்த வேலை. இதற்கென தரப்படும் உடை, வி ஆர் ஹெட் செட் ஆகியவற்றை அணிந்து கொண்டு 7 மணி நேரமும் பல்வேறு வகையான மனிதர்களின் செயல்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கு 5’7 முதல் 5’11 வரை உயரம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.