Category:
Created:
Updated:
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜப்பான்முதல் இந்தியாவரையான பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்தியத்தை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
'நிலையான எதிர்காலத்திற்கான வலுவான உலகின் தென்பிராந்தியம்'' என்ற தொனிப் பொருளில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட 'உலகின் தென்பிராந்தியத்தின் குரல்' என்ற அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00