இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வித்தியாசமான வேட்பாளர்ளுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 14 பேர் பல்வேறு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அடங்குகின்றனர்.
முன்னாள் அமைச்சர்களான சரத் பொன்சேகா, ரொஷான் ரணசிங்க மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரும் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்றம் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களாகும்.
அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 7 ஆகும். வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதி வேட்பாளர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மேலும் சில வேட்பாளர்கள் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
15 முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய 7 கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்சிகள் மற்றும் மக்கள் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
00