கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதி
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்றுமுதல் ஒவ்லொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றுத்தருமாறு குறித்த பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து கறித்த பகுதிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் மேற்கொண்: நிலைமைகளை ஆராய்ந்தறிந்திருந்ததுடன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள ஏதுவான சூழலை உருவாக்கி தருவதாகவும் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
00