Category:
Created:
Updated:
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தி. சர்வானந்தன் பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்தவர் ஆவார்.
அவருக்கான நியமனக் கடிதமானது வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சாள்ஸினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.