Ads
பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஷேக் ஹசீனா வலியுறுத்து!
பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா சென்ற பிறகு முதன்முறையாக பங்களாதேஷ் வன்முறை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பங்களாதேஷின் தேசியத் தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads