கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு – சேவை பெறமுடியாது மக்கள் அவதி
இன்று (12) முதல் 19 ஆம் திகதிவரை கருப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பில் தமது யோசனைகள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமென கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று காலைமுதல் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செயற்பாட்டால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளமுடியாது திண்டாடும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொள்ளும் இவ்வாறான அரச அதிகாரிகள் தாம் விரும்பிய நேரங்களில் தமது சுய நலன்களுக்காக போராட்டம் என்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபடவதாகவும் இதனால் மக்களின் தேவைப்பாடுகள் திட்டமிட்டு தடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டும் பொதுமக்கள் இவ்வாறு போராட்டம் மேற்கொள்ளும் அரச ஊழியர்களது ஊதியங்களை நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் எனவும் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது
000