Category:
Created:
Updated:
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், பங்களாதேஷ் போன்று இலங்கையும் பாழ்நிலமாக மாறும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
பொலனறுவையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக உள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் வாரம்முதல் முன்னெடுப்போம் அத்தோடு நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000