சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  1355 news
  •  ·  0 friends
  • 1 followers

கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு - தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் - பேச்சுவார்தையில் தேர்தல்கள் ஆணைக்குழு

கிராம உத்தியோகத்தர் பணிப்புறக்கணிப்பு - தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் - பேச்சுவார்தையில் தேர்தல்கள் ஆணைக்குழு!

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியால் அறிவிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இடையூறு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் மீண்டும் பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று தொடக்கம் ஒருவார காலத்திற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில் கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சகல வேலைகளையும் எவ்வித பிரச்சினையுமின்றி மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னதாக இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், இன்று தொடக்கம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இன்றும் மற்றும் நாளையும் அனைத்து கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதுடன், நாடு தழுவிய ரீதியில் ஒரு வார காலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று காலை பொதுநிர்வாக அமைச்சுக்கு முன்பாக மௌன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

000

  • 429
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads