சுதந்திர தினத்தினையொட்டி இந்திய எல்லைகளின் பாதுகாப்பு அதிகரிப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அயல் நாடுகளுடனான எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விசேடமாக அசாமில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிப்பதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சுதந்திர தினம் எதிா்வரும் 15 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷ் கலவரம் காரணமாக, இந்திய ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை துறையில், சற்று நிச்சயமற்ற சூழல் நிலவி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளதால், விரைவில் நிலைமை சீரடையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய முதலீடுகளை பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஆடைத் துறையினர் அங்கு நல்லெண்ணத்துடன் முதலீடு செய்து வருவதாகவும், பங்களாதேஷில் அமைந்துள்ள இடைக்கால அரசு, பிரச்னைகளுக்கு தாமதமின்றி தீர்வு காண்பதுடன், மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும் என நம்புவாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்துள்ளார்.
000