Ads
எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து எதிர்கால சந்ததியினருக்கான வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல பெண்களும் ஆதரவளிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளின் பெண் தலைவர்களே எமக்கு உதவி வழங்கினர்.
தற்போது நாடு தீர்மானமிக்கதொரு சந்தர்ப்பத்தை அடைந்துள்ளது. அதனடிப்பரைடயில் அனைவரும் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை தற்போது தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000
Info
Ads
Latest News
Ads