ஆப்கானிஸ்தான் வீரர் இஹ்சானுல்லா ஜனத்திற்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிலும் விளையாட 5 ஆண்டுகளுக்குத் தடை
காபூல் பிரீமியர் லீக்கின் (கே.பி.எல்) 2ஆவது தொடரின் போது போட்டி விதிகளை மீறியமைக்காக முன் வரிசை துடுப்பாட்ட வீரரான இஹ்சானுல்லா ஜனத்திற்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை அவர் மீறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் இந்த விதி மீறல் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு மேலும் 3 வீரர்கள் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சந்தேகிப்பதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
00